Header Logo
Mogo Academy

செய்திகள்
SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்

Jul 30, 2026 - 05:37 PM -

0

SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்
Mobitel inner

தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.

 

2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

 

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara