Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பொலிஸார் இருவர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை

Jul 31, 2026 - 09:17 AM

பொலிஸார் இருவர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை
Mobitel inner

தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara