Header Logo
செய்திகள்
சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண் கைது

Jul 31, 2026 - 01:29 PM

 சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண் கைது
Mobitel inner

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று, தனது கைத்தொலைபேசியை மறைத்து வைத்துக்கொண்டு இரகசியமாக இந்தச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உடுகம பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏதேனும் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் உடுகம முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara