Header Logo
விளையாட்டு
24 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில் உலகக் கிண்ணம்!

Jul 31, 2026 - 03:53 PM

24 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில் உலகக் கிண்ணம்!
Mobitel inner

2027 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் நடைபெறும் என்றும், இதில் தென் ஆப்பிரிக்கா எட்டு மைதானங்களை வழங்கும் என்றும் ஐசிசி அறிவித்தது. 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த 50 ஓவர் போட்டி தொடர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. 

முன்னதாக 2003 இல், தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 08 ஆவது ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரை நடத்தின. 

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், சிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை இப்போட்டித் தொடரின் இணை-நடத்துநர்களாக அறிவிக்கப்பட்டன. 

இந்த முக்கிய நிகழ்வில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கிரீம் ஸ்மித், மகாயா என்டினி, ஹஷிம் அம்லா, தெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருடன் சிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகட்சா மற்றும் நமீபியாவின் ருடால்ஃப் ஜான்சன் வான் வூரென் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

தென் ஆப்பிரிக்கா - வாண்டரர்ஸ் ஸ்டேடியம் (ஜோகன்னஸ்பர்க்), செஞ்சுரியன் (ஷ்வானே), நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் (கேப் டவுன்), கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம் (டர்பன்), செயின்ட் ஜார்ஜ் பார்க் (கெபெர்ஹா), மங்காங் ஓவல் (ப்ளோம்ஃபோன்டைன்), போலண்ட் பார்க் (பார்ல்) மற்றும் பஃபலோ பார்க் (கு-கோம்போ சிட்டி). 

சிம்பாப்வே - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ) மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் (விக்டோரியா ஃபால்ஸ்). நமீபியாவில் நடைபெறும் போட்டிகள் நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் (விண்ட்ஹோக்) நடைபெறும். 

"24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகழ்பெற்ற போட்டி தொடர் மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு வருவது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். 

இப்பகுதியின் தனித்துவமான பண்புகளான விருந்தோம்பல், ஆர்வம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகியவை மறக்க முடியாத ஒரு நிகழ்வை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2027 ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும். புதிய மூன்று - கட்ட வடிவத்தின் மூலம் போட்டிகள் அதிக முக்கியத்துவம் மற்றும் விறுவிறுப்புடன் நடத்தப்பட்டு, ரசிகர்களின் அனுபவம் மேம்படுத்தப்படும். 

'சூப்பர் சீரிஸ்' சுற்றில், தரவரிசையில் 12 முதல் 14 ஆவது இடங்களில் உள்ள மூன்று அணிகள் 'ரவுண்ட்-ராபின்' முறையில் மோதும்; இதில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். மொத்தம் 30 போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'ரவுண்ட்-ராபின்' முறையில் விளையாடும். 

ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளும், அத்துடன் இரு குழுக்களிலும் அடுத்த சிறந்த நிலையில் உள்ள அணியும் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும். 

'சூப்பர் 7' சுற்றில் 21 'ரவுண்ட்-ராபின்' போட்டிகள் நடைபெறும், இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அரையிறுதியில், 'சூப்பர் 7' சுற்றில் முதலிடம் பிடித்த அணி நான்காம் இடத்தை பிடித்த அணியுடனும், இரண்டாம் இடம் பிடித்த அணி மூன்றாம் இடம் பிடித்த அணியுடனும் மோதும்.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara