Jul 31, 2026 - 04:36 PM
தமிழக பொலிஸில் சிறப்பாக பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு ஆண்டுதோறும் முதலமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய பொலிஸார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்க உள்ளார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் பொலிஸாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்குகிறார்.
பொலிஸாருக்கும் ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்குகிறார்.
பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

