Header Logo
செய்திகள்
3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசுடமையாக்க அவதானம்

Jul 31, 2026 - 07:30 PM

3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசுடமையாக்க அவதானம்
Mobitel inner

2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார். 

மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டின் கீழ் போதைப்பொருள் தொடர்பில் 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 995 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சந்தேகநபர்களில் 378 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் 3,287 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன. 

இதேவேளை, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாடு அமுல்படுத்தப்பட்ட கடந்த ஒன்பது மாதங்களில் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 102,116 மில்லியன் ரூபாய் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara