Jul 31, 2026 - 09:14 PM
மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டிற்கு 'ரிவோல்வர்' (Revolver) ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

