Header Logo
செய்திகள்
வவுனியாவில் விபத்து: மதுபோதை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது!

Aug 1, 2026 - 09:55 AM

வவுனியாவில் விபத்து: மதுபோதை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது!
Mobitel inner

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. 

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். 

பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara