Aug 1, 2026 - 11:53 PM
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையில் பதற்றநிலை ஏற்பட்டதோடு, அதில் 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.
தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளின் உறவினர்களும் ஒன்றுகூடியுள்ளதுடன், அவர்களிடையே சில பதற்றமான சூழல் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், சிறைச்சாலையின் உட்புற நிலைமையைக் கண்காணிப்பதற்காகவே விமானப்படையினால் குறித்த ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பன ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

