Header Logo
பல்சுவை
சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை!

Aug 6, 2026 - 12:11 PM

சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை!
Mobitel inner

மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவரது மனைவி ஆர்த்தி, சென்னை உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் தியோ ஆழிசை (வயது 13). கருத்துவேறுபாடு காரணமாக சவுக்கு சங்கரும், ஆர்த்தியும் தனித்தனியாக வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் ஆர்த்தியின் பெற்றோர் உள்ளனர். அங்கு தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டி கவனிப்பில் இருந்து சிறுவன் தியோ ஆழிசை, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். 

தாய் மீதான ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக சிறுவன் சோகமாக இருந்துள்ளான். எனவே தாயார் ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில், கடந்த 04 ஆம் திகதி சிறுவன் தியோ ஆழிசை நடுக்குப்பம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டான். 

நேற்று (05) காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்புமாறு பேரனிடம் தாத்தா, பாட்டி கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தனர். 

வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த தாத்தா, பாட்டி பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கியவாறு இருந்தான். 

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு மரக்காணம் அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே தியோ ஆழிசை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாடசாலைக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara