Header Logo
செய்திகள்
துப்பாக்கிச் சட்டங்களில் திருத்தம் செய்ய தாய்லாந்து அரசு கவனம்

Aug 8, 2026 - 08:12 AM

துப்பாக்கிச் சட்டங்களில் திருத்தம் செய்ய தாய்லாந்து அரசு கவனம்
Mobitel inner

தாய்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை திருத்துவது குறித்து அந்நாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டங்களை திருத்துவது குறித்து தாய்லாந்து பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பொது இடங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதைத் தடை செய்யவும், அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பேங்கொக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் வரை காயமடைந்தனர்.

அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவனே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அம்மாணவன் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்த அம்மாணவன், பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara