Header Logo
வணிகம்
அமானா தகாஃபுல் வருடாந்த விருது வழங்கும் விழா 2025: தனது வெற்றியாளர்களின் குழுவை கௌரவித்த அமானா தகாஃபுல்

Aug 11, 2026 - 03:03 PM

அமானா  தகாஃபுல் வருடாந்த விருது வழங்கும் விழா 2025: தனது வெற்றியாளர்களின் குழுவை  கௌரவித்த அமானா  தகாஃபுல்
Mobitel inner

இலங்கையின் அதிகளவிலான விருதுகளை வென்ற காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் [Amana Takaful Insurance], 2025ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த விருது வழங்கும் விழாவை 2026 ஜூன் 24ஆம் திகதி கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்தது. இவ்விழாவில், அமானா பொது காப்புறுதி மற்றும் அமானா ஆயுள் காப்புறுதி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் விற்பனைத் துறையினரின் சிறப்பான சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. 

இந்த கௌரவமிக்க விழாவில், பொது காப்புறுதியின் தலைவர் எம். ஸுல்பிகார் கவுஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசன் காசிம், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் எஸ். கார்த்திகன் மற்றும் கெஹான் ராஜபக்ஸ, அமானா தகாஃபுல் மாலைத்தீவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹரீஸ் சுலைமான், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அமானா வங்கியின் தலைமைத்துவக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் வருகை இந்நிகழ்விற்கு மேலும் பெருமையையும் கௌரவத்தையும் சேர்த்தது. 

FIFA உலகக் கிண்ணப் போட்டியின் ஆர்வம், ஒற்றுமை மற்றும் போட்டி மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டு, இவ்வாண்டின் விருது வழங்கும் விழா ''மிகச்சிறந்த வெற்றி வீரர்களின் குழு ["The Ultimate League of Champions"] என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இந்த முழு நிகழ்ச்சியும் கால்பந்துப் போட்டியின் உலகளாவிய பெருமையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் கண்கவர் அரங்கு போன்ற காட்சிகள், திரைப் படப் படைப்புகள், கால்பந்து சார்ந்த பொழுதுபோக்குகள் மற்றும் கூட்டு முயற்சி, விடாமுயற்சி, வெற்றிக்கான தொடர் பயணம் ஆகியவற்றைக் கொண்டாடும் வெற்றியாளர் சூழல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. 

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல்லாக, அமானா தகாஃபுல் தனது ஆயுள் மற்றும் பொது காப்புறுதி பிரிவுகள் இரண்டிலும் இணைந்து 250-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கியது. இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பாராட்டு விழாவாக அமைந்தது. விற்பனை, தலைமைத்துவம், செயல்பாடு மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளைப் படைத்தவர்களை இந்த விருதுகள் சிறப்பித்தன. இதில் மதிப்புமிக்க வெற்றி வீரர்களின் வெற்றி வீரர் ' Champion of Champions விருதுகள், MD's Club, CEO's Club, CEO's & Operational Excellence விருதுகள், MDRT, COT மற்றும் தனிநபர் மற்றும் குழுவின் பிற சிறப்பான சாதனைகளும் அடங்கும். அமானா பொது காப்புறுதியை பிரதிநிதித்துவப்படுத்திய திரு. அஃப்சல் இப்ராஹிம், 2025ஆம் ஆண்டிற்கான வெற்றி வீரர்களின் வெற்றி வீரர் [Champion of Champions] விருதை வென்று கௌரவிக்கப்பட்டார். விற்பனைத் துறையில் அவர் வெளிப்படுத்திய அபாரமான சாதனைகளைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. 2010 முதல் 'அமானா தகாஃபுல்' குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கும் அஃப்சல், தனது அயராத உழைப்பாலும் தொடர்ச்சியான திறமையாலும் தனது பயணத்தை சிறப்பித்துள்ளார். மலேசியா சுற்றுலாப் போட்டி வென்றது, சில்லறை விற்பனை ஊக்குவிப்பாளர் (Retail Promoter) அங்கீகாரம் மற்றும் விற்பனை முகாமையாளர் பிரிவு வெற்றியாளர் (Sales Manager Category Winner) போன்ற அவரது 2025 சாதனைகள், நிறுவனத்தின் உயரிய விருதைப் பெற்றுத் தந்துள்ளதுடன், அமானா தகாஃபுல் நிறுவனத்தின் திறமையான விற்பனை நிபுணர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது. 

அமானா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் குறிக்கும் வகையில், திரு. சோமசுந்தரம் சுரேந்தர் 2025/2026 இன் ‘’மிகச்சிறந்த சாதனையாளர்’’என்று பெயரிடப்பட்டார். இதன் மூலம் விற்பனை வர்த்தகப் பிரிவு 3-ல் (Sales Business Unit 3) இருந்து இந்தப் புகழ்பெற்ற பட்டத்தைப் பெறும் முதல் ஆண் பெருமகன் ஆனார் .மேலும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளில் மில்லியன்டொலர் வட்ட மேசை (MDRT) தகுதியைப் பெற்ற நிறுவனத்தின் முதல் காப்புறுதி ஆலோசகர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

அன்றைய மாலைப்பொழுது, உலகக் கிண்ண கருப்பொருளை உயிர்ப்பிக்கும் காட்சிப் படைப்புகள், கால்பந்து ஈர்க்கப்பட்ட பொழுதுபோக்குகள் மற்றும் அழுத்தமான கதைசொல்லல் ஆகியவற்றுடன் மறக்க முடியாத ஒரு சாம்பியன்ஷிப் சூழலை உருவாக்கியது. இது ஒரு வெறும் விருது வழங்கும் விழாவை விட மேலாக, அமானா தகாபுலின் வெற்றியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஆர்வம், அர்ப்பணிப்பு, குழுப்பணி மற்றும் வெல்லும் மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடியதுடன், ஒவ்வொரு சாதனையும் அங்கீகரிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு வெற்றியாளரும் [சாம்பியனும்] கொண்டாடப்படும் ஒரு கலாசாரத்தை வலுப்படுத்தியது. 

அமானா தகாஃபுல் தொடர்ந்து வளர்ச்சியையும் புதுமையையும் நோக்கி தனது பயணத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் வருடாந்த விருது வழங்கும் விழா, தனது மனிதவளத்தை வலுப்படுத்துதல், சிறந்த சாதனைகளைப் பாராட்டுதல் மற்றும் சாம்பியன்கள் உருவாகும் வெற்றிக் கலாசாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வலிமையான அடையாளமாகத் தொடர்ந்து திகழ்கிறது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara