Aug 12, 2026 - 07:52 AM

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றும் (11) யாழ்ப்பாணம் நீதவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அதன்படி இதுவரை மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
516வது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும்,மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.















