Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
‘10,000 ஸ்டெப்ஸ் வாக்கிங்’ நடைமுறை எல்லோருக்கும் பொருந்துமா?

Aug 18, 2026 - 12:43 PM

‘10,000 ஸ்டெப்ஸ் வாக்கிங்’ நடைமுறை எல்லோருக்கும் பொருந்துமா?
Mobitel Inner 1278

அன்றாடம் நடைப்பயிற்சி செய்பவர்கள் பலரும் 10,000 அடிகள் நடப்பதையே டார்கெட்டாக வைத்திருப்பார்கள். இந்த 10,000 என்ற டெக்னிக் எதனால் வந்தது, ஏன் வந்தது, நிச்சயம் எல்லோரும் 10,000 அடிகள் நடந்தே ஆக வேண்டுமா என்பது பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். 

10,000 அடிகள் எதனால், ஏன் வந்தது? நடைப்பயிற்சியில் 10,000 அடிகள் என்ற இலக்கு எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை; மாறாக, 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது ஜப்பானில் விற்கப்பட்ட 'மானோகேட்டர்' (Manpo-kei) என்ற பெடோமீட்டர் (Step Counter) கருத்தின் வணிக விளம்பர உத்தியாகவே இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டது. 'மானோ-கேட்டர்' என்றால் '10,000 அடிகளின் கருவி' என்று அர்த்தம். 

மூளைக்கு எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய எண் என்பதால் பிற Fitness Trackers நிறுவனங்களும், இதையே தங்கள் சாதனங்களின் இலக்காகப் பயன்படுத்தத் தொடங்கின. 

அனைவருமே கண்டிப்பாக 10,000 அடிகள் நடக்க வேண்டுமா? இல்லை. சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின்படி, முதியவர்கள் அல்லது பிஸியாக இருப்பவர்கள் நாளைக்கு 7,000 முதல் 8,000 அடிகள் நடந்தாலே ஆரோக்கியமான ஆயுளைப் பெற முடியும் மற்றும் மரண அபாயத்தைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த 7,000 – 8,000 என்பதும், அவரவர் வயது, உடல் தகுதி, மற்றும் நாளின் வேலை பளுவைப் பொறுத்து மாறலாம். அனைவருக்கும் ஒரே அளவு பொருந்தாது. ஹார்வார்டு ஆய்வுகளின்படி, பெண்களுக்கு தினமும் 4,400 முதல் 7,500 அடிகள் நடப்பதே கணிசமான நன்மைகளைத் தந்துவிடுகிறது, அதற்கு மேல் நடப்பதால் கூடுதல் பலன் கணிசமாக அதிகரிக்கும். 

ஆகவே எண்களைத் துரத்துவதை விட, தினமும் தொடர்ந்து மிதமான வேகத்தில் 30 முதல் 45 நிமிடங்கள் நடப்பது எண்களைக் கணக்கிடுவதை விட மிக முக்கியமானது. 

அன்றாடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயப் பிரச்சனைகளை தடுக்கவும் உதவும். மேலும் இதயத்தின் தசைகளை வலுப்படுத்துவதுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீர்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும். அத்துடன் வாழ்வியல் பாதிப்புகளை தடுக்கவும் நடைப்பயிற்சி உதவும்.


MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278