Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
GoodWe மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் (SLSEA) 2026 ஆம் ஆண்டிற்கான Solar + Storage Forum இல் இலங்கையின் வலுசக்தி எதிர்காலம் முக்கிய கவனத்

Aug 19, 2026 - 01:30 PM

GoodWe மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் (SLSEA) 2026 ஆம் ஆண்டிற்கான Solar + Storage Forum இல் இலங்கையின் வலுசக்தி எதிர்காலம் முக்கிய கவனத்
Mobitel Inner 1278
EDEX Inner

உலகின் முன்னணி PV Inverter உற்பத்தியாளரும் திறன்மிகு வலுசக்தி தீர்வு வழங்குனருமான GoodWe, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையுடன் (SLSEA) இணைந்து, 2026 ஆம் ஆண்டிற்கான சூரியசக்தி மற்றும் மின்கலக் களஞ்சியப்படுத்தல் அரங்கை (Solar + Storage Forum 2026) கொழும்பு Marino Beach ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர், இது GoodWe இன் மின்கலக் களஞ்சியப்படுத்தல் தீர்வுகள் மீதான தீவிர ஆர்வத்தையும், சூரியசக்தி மற்றும் மின்கல வலுப் பயன்பாட்டை நோக்கிய நாட்டின் வளர்ந்து வரும் உந்துதலையும் பிரதிபலிக்கிறது. 

வலுசக்தி அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக, வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் (SLSEA) தலைவர் பேராசிரியர் விஜேந்திர ஜே. பண்டார ஆகியோருடன் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் தொழில் துறை தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக தெரிவிக்கையில்: "இலங்கையின் தூய வலுசக்தி எதிர்காலமானது அரசாங்கம், தொழில் துறையினர் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் இடையிலான வலுவான ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. புத்தாக்கங்களை வளர்ப்பதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வுகளின் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும் இதுபோன்ற அரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்றார். 

வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு மேலும் குறிப்பிடுகையில்: "இலங்கை தனது மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்களிப்பைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வலுசக்தியைக் களஞ்சியப்படுத்தும் தொழில்நுட்பங்களும் மின் கட்டமைப்பை நவீனமயமாக்குதலும் எதிர்காலத்தில் மிக முக்கியமான காரணிகளாக அமையும்" என்றார். 

GoodWe நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் (APAC) பிராந்திய விற்பனைப் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் ஹௌ (James Hou) கருத்துத் தெரிவிக்கையில்: "குடியிருப்பு மற்றும் வர்த்தக/கைத்தொழில் (C&I) சந்தைகளில் முதற்தர மேற்கூரை (Rooftop) சூரியசக்தி களஞ்சியப்படுத்தல் விநியோகத்தர் என்ற வகையில், இலங்கையின் தூய வலுசக்தி மாற்றத்திற்கும், நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை அடைவதில் சூரியசக்தி மற்றும் களஞ்சியப்படுத்தலின் பங்கிற்கும் முழுமையான ஆதரவளிக்க GoodWe உறுதிபூண்டுள்ளது" என்றார். 

இலங்கையின் முதற்தர மேற்கூரை சூரியசக்தி களஞ்சியப்படுத்தல் நாமமாக சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்தல் 

நம்பகமான உற்பத்திகள், உள்ளூர்மயமாக்கப்பட்ட சேவைகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கங்களை வழங்கி, கடந்த 13 ஆண்டுகளாக இலங்கையில் GoodWe மிகவும் நம்பகமான வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. இலங்கை வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, நாடு தழுவிய அளவிலான உள்ளூர் சேவை வலையமைப்பையும் விரிவான விநியோகத்தர் வலையமைப்பையும் GoodWe நிறுவியுள்ளதுடன், இது வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்திலும் வினைத்திறனுடனும் ஆதரவளிப்பதை உறுதிசெய்கிறது. நாடு தழுவிய சேவை வலையமைப்பு, அனுபவமிக்க உள்ளூர் தொழில்நுட்ப ஆதரவு, போதுமான உதிரிப்பாகங்கள் மற்றும் உத்தரவாத மாற்றீடுகளுக்கான இலவச நாடளாவிய போக்குவரத்து ஆகியவற்றுடன், விரைவான, வசதியான மற்றும் வினைத்திறனான விற்பனைக்கு பிந்திய சேவையை GoodWe வழங்கி வருகின்றது. 

அடுத்த தலைமுறைக்கான குடியிருப்பு மற்றும் வர்த்தக/கைத்தொழில் (C&I) மின்கலக் களஞ்சியப்படுத்தல் தீர்வுகளின் அறிமுகம் 

இதன் ஒரு பகுதியாக, GoodWe தனது சமீபத்திய குடியிருப்பு மற்றும் வர்த்தக/கைத்தொழில் (C&I) வலுசக்தி களஞ்சியப்படுத்தல் தொகுப்பைக் காட்சிப்படுத்தியதுடன், நிறுவனத்தின் தொடர்ச்சியான உற்பத்திப் புத்தாக்கத்தையும் முன்னிலைப்படுத்தியது. இதில் ES Uniq உடன் இணைக்கப்பட்ட Lynx U G3, ET LV Series மற்றும் Lynx A G4 ஆகிய முன்னணி தீர்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. GoodWe யின் புத்தாக்கமிக்க 'CoreLock' எண்ணக்கருவை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இத்தீர்வுகளில், மின்கலமும் Inverter உம் தடையின்றி ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த, ஒரு-நிறுத்த வலுசக்தி களஞ்சியப்படுத்தல் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 

சூரியசக்தி மற்றும் மின்கலக் களஞ்சியப்படுத்தல் அரங்கின் இந்த இரண்டாவது பதிப்பானது, அரசாங்கம், தொழில் துறையினர் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக அமைவதுடன், பசுமையான மற்றும் அதிக வலுசக்தி பாதுகாப்புடைய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் தொலைநோக்குப் பார்வைக்கும் ஆதரவளிக்கிறது.


MOST READ

காணொளி
இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Mobitel 1278