Oct 12, 2026 - 03:26 PM
By மன்னார் நிருபர் லெம்பட்
By மன்னார் நிருபர் லெம்பட்

மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பஸ் ஒன்று பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பஸ்ஸில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனையோர் எவ்வித காயங்களுமின்றித் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் விபத்தின்போது பஸ்ஸின் மிதிப்பலகையில் (Footboard) பயணித்துள்ளார் என்றும், பஸ்ஸில் பயணித்தவர்கள் அனைவரும் குறித்த நிறுவனத்தின் தொழிலாளர்களே என்றும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






























