Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்.பி!

Aug 20, 2026 - 11:23 AM

மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்.பி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந்த், 2008 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கல்வி பயின்ற போது, விசா விதிமுறை மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்த்து பாராளுமன்றக் குழுக்கள் முன் தீவிரமாகப் போராடினார். அந்தச் சமயத்தில் தான் அன்றைய இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டேவை அவர் சந்தித்தார். 

ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம், 2016 ஆம் ஆண்டு காதலாக மாறியது. 

2016 ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட போதிலும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நிதிச் சந்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் 2018 கேரள வெள்ளப்பெருக்கு, கோவிட் பெருந்தொற்று மற்றும் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மார்ட்டின் டே கேரளா வந்தடைந்து, தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். வேஷ்டி அனிந்து கேரளா பாரம்பரிய உடையில் மாப்பிள்ளையாக மார்ட்டின் டே மிளிர, நிதிச் சந்த் கசவு புடவையில் காட்சியளித்தார். இந்த திருமண விழாவில் நிதிச் சந்தின் 22 வயது மகன் வேதிக் சங்கர் உட்பட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர். 

தற்போது நிதிச் சந்த் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மார்ட்டின் டே ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) முக்கிய தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.


MOST READ

காணொளி
இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

Mobitel 1278