Header Logo
SLIC
வணிகம்
ஹேமாஸ் நிறுவனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் கால்பதிப்பதன் மூலம் தனது சர்வதேச இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது

Aug 24, 2026 - 11:17 AM

ஹேமாஸ் நிறுவனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் கால்பதிப்பதன் மூலம் தனது சர்வதேச இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

கென்யாவின் ட்விகா ஸ்டேஷனர்ஸ் நிறுவனத்தின் கையகப்படுத்தியதன் மூலம் நுகர்வோர் பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துவதுடன் பிராந்திய வளர்ச்சிக்குமான தளத்தையும் உருவாக்குகிறது. 

இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC), கென்யாவின் முன்னணி எழுதுபொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ட்விகா ஸ்டேஷனர்ஸ் பிரிண்டர்ஸ் லிமிடெட் (Twiga Stationers & Printers Limited) நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைக் கையகப்படுத்தியதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தனது தடத்தைப் பதிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் காசுகு (Kasuku), கிரவுன்பேர்ட் (CrownBird) மற்றும் என்வோய் (Envoy) போன்ற பல பிரபல எழுதுபொருள் மற்றும் கற்றல் சார்ந்த பிராண்டுகளின் (வர்த்தகநாமங்களின்) உரிமையாளராக இருப்பதுடன், இவை பிராந்தியம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இது ஹேமாஸ் நிறுவனத்தின் முதலாவது சர்வதேச கையகப்படுத்தலாகும். இலங்கைக்கு அப்பால் பரந்து விரிந்த தொழில்களை உருவாக்குவதற்கான குழுமத்தின் நீண்டகால மூலோபாயத்தில் இதுவொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அத்துடன், 136 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான ஜிடிபி (GDP) மற்றும் 54 மில்லியனுக்கும் அதிகமான இளைய வளரும் சனத்தொகையை கொண்ட, கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றான கென்யாவில், ஹேமாஸ் வலுவான ஒரு செயல்பாட்டுத் தளத்தை அமைக்கவும் இது வழிவகுக்கிறது. 

ட்விகா நிறுவனம் எழுதுபொருள் துறையில் வலுவான பிராண்ட் (வர்த்தகநாம) மதிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்பியுள்ளது. இக்கையகப்படுத்தல், ஹெமாஸின் நுகர்வோர் பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முன்னணி கற்றல் பிராண்டான (வர்த்தகநாமமான) அட்லஸ் அக்சிலியாவுடன் (Atlas Axillia) குறிப்பாகப் பள்ளிப் பருவக் கற்றல் மற்றும் கல்வி சார்ந்த நுகர்வோர் பிரிவுகளில் அர்த்தமுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குகிறது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை குறித்து ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில்: 

ஹேமாஸின் சர்வதேசமயமாக்கல் பயணத்தில் இதுவொரு மிக முக்கியமான கட்டமாகும். கென்யாவிற்குள் நமது வருகையானது, ஒரு பெரிய, இளைய மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையை நமக்கு அணுகத் தருவதுடன், காலப்போக்கில் விரிவான கிழக்கு ஆப்பிரிக்க வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு தளத்தையும் உருவாக்குகிறது. ட்விகாவின் சந்தைத் தலைமைத்துவம், நம்பகமான பிராண்டுகள் மற்றும் விநியோக பலம் ஆகியவை, பிராண்டுகளை உருவாக்குதல், தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் அட்லஸ் அக்சிலியா மூலம் நிரூபிக்கப்பட்ட நமது ஆற்றல்களுடன் கச்சிதமாகப் பொருந்துகின்றன. ஒன்றாக இணைந்து, கிழக்கு ஆப்பிரிக்க சந்தைகள் முழுவதும் நமது தாக்கத்தை விரிவுபடுத்துவதற்கான வலுவான வாய்ப்பை நாம் காண்கிறோம். 

ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாப்ரினா எஸுபலி கருத்து தெரிவிக்கையில்: 

வளர்ச்சியடையும் சந்தைகளில் நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டுகளை உருவாக்குவதற்கான நமது லட்சியத்தில் ட்விகா வின் கையகப்படுத்தல் ஒரு துணிச்சலான முன்னெடுப்பாகும். கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகியவை இப்போது நமது சர்வதேச நுகர்வோர் மூலோபாயத்தின் முக்கியமான தூண்களாக மாறியுள்ளதால், ஹெமாஸ் கன்சியூமர் பிராண்டுகளின் எதிர்கால வளர்ச்சியில் பிராந்திய சந்தைகள் மேலும் மேலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ட்விகாவின் பிராண்ட் மதிப்பு, உற்பத்தித் தளம் மற்றும் ஆழமான விநியோகக் கட்டமைப்பு ஆகியவை எழுதுபொருள் துறையில் விரிவடைவதற்கும், காலப்போக்கில் ஒரு பரந்த நுகர்வோர் போர்ட்ஃபோலியோ மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நுகர்வோரைப் புரிந்து கொண்டு அவர்களுக்குச் சேவையாற்றுவதற்கும் ஒரு வலுவான தளத்தை வழங்குகின்றன. 

ஹெமாஸ் சர்வதேச அளவில் விரிவடைந்து வரும் அதே வேளையில், இலங்கையில் முதலீடு செய்வதற்கும், இலக்கு சார்ந்த பிராண்டுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய திறன்களை உருவாக்குவதற்கும், நுகர்வோர், சமூகங்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.


MOST READ
06
 தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

Aug 24, 2026 - 11:52 AM


காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278