Aug 24, 2026 - 11:29 AM





தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள SLT-MOBITEL இன் புத்தாக்க மையமான The Embryo இன் SenseGrid தீர்வானது, சமீபத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற SLASSCOM தேசிய கண்டுபிடிப்பு விருதுகள் 2026 நிகழ்வில், “உற்பத்தித் துறையின் சிறந்த புத்தாக்க தயாரிப்பு” பிரிவின் கீழ் தேசிய மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தை சுவீகரித்துள்ளது.
SenseGrid என்பது, அறிவார்ந்த கண்காணிப்பு, தானியங்கிமயமாக்கல் மற்றும் AI-powered analytics மூலமாக உற்பத்தி மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளை மறுவடிவமைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, நிறுவன மட்டத்திலான ஒரு Industrial IoT தீர்வாகும்.
The Embryo குழுவினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த விருது, புத்தாக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டவை மட்டுமன்றி, தேசிய தேவைகளுக்குப் பொருத்தமானவையாகவும், வர்த்தக ரீதியாக வலுவானவையாகவும், இலங்கையின் டிஜிட்டல் நிகழ்ச்சிநிரலுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள தீர்வுகளை உருவாக்குவதற்கும் SLT-MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இச்சாதனை, தொழிற்துறையை மையமாகக் கொண்ட டிஜிட்டல் புரட்சியை முன்னெடுப்பதில் SLT- MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், உற்பத்தி நடவடிக்கைகளை மறுவடிவமைப்பதில் SenseGrid ஏற்படுத்தும் உண்மையான தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. Industrial IoT மற்றும் AI இன் ஆற்றலைப் பயன்படுத்தி, கண்காணிப்பு, நிகழ்நேரக் காட்சிப்படுத்தல், கணிப்பு நுண்ணறிவுகள் மற்றும் தரவு சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் வசதி ஆகியவற்றை SenseGrid வழங்குகின்றது. இது இயங்கா நேரத்தைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், Industry 4.0 இலக்கை நோக்கி தொழிற்துறையினர் நம்பிக்கையுடன் முன்னேறவும் பெரிதும் உதவுகின்றது.
DHL மற்றும் DSI போன்ற கூட்டாண்மை நிறுவனங்களின் நடைமுறை ரீதியான தொழிற்துறைச் சூழல்களில் ஏற்கனவே வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள SenseGrid, ஒரு prototype என்ற நிலையிலிருந்து வளர்ச்சி கண்டு, இயந்திரங்களின் நிலை குறித்த கண்காணிப்பு, களஞ்சியசாலை வெப்பநிலைக் கட்டுப்பாடு, சூழலியல் காட்சிப்படுத்தல் மற்றும் செயற்பாடுகள் குறித்த எச்சரிக்கை விழிப்பூட்டல்கள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் தனது ஆற்றலை நிருபித்துள்ளது. இந்த வெற்றிப் கதைகள், தொழில்துறை அமைப்புகளில் செயற்படும் போது SenseGrid கொண்டுள்ள நடைமுறைப் பெறுமானத்தையும் வர்த்தக ரீதியான சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்துகின்றன.
மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் இலங்கைச் சங்கத்தினால் (SLASSCOM) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் “தேசிய கண்டுபிடிப்பு விருதுகள்” நிகழ்வு, நாட்டின் முன்னணிப் புத்தாக்க யோசனைகளையும், மாற்றத்தை ஏற்படுத்தும் டிஜிட்டல் தீர்வுகளையும் அங்கீகரிக்கும் மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவானது நிதித் தொழில்நுட்பம் (fintech), விவசாயத் தொழில்நுட்பம் (agritech), சுகாதாரத் தொழில்நுட்பம் (healthtech), உற்பத்தி, விநியோகம் (logistics), சில்லறை வணிகம் (retail), விருந்தோம்பல் (hospitality), கல்வித் தொழில்நுட்பம் (edutech), அரச நிறுவனங்களின் புத்தாக்கம் மற்றும் பொதுவான புத்தாக்கத் துறைகள் உட்பட விரிந்த அளவிலான பல துறைகளிலிருந்தும் வெளிவந்த புத்தாக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.























