Aug 24, 2026 - 11:40 AM





தனது தளராத உறுதித்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் நீடித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், கொமர்ஷல் வங்கி, அண்மையில் வெளியிடப்பட்ட Brand Finance இன் 2026 ஆம் ஆண்டின் 100 பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் அறிக்கையில் இலங்கையின் வலிமைமிகு வங்கி வர்த்தகநாமமாகத் தனது தலைமைத்துவத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் முன்னனி வர்த்தகநாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையின்படி, கொமர்ஷல் வங்கி ஒட்டுமொத்தமாக நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பெறுமதிமிக்க வர்த்தகநாமமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 46.6 பில்லியன் ரூபா மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் 17.8% குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் வங்கியின் வர்த்தகநாமப் பெறுமதி 54.9 பில்லியன் ரூபாவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வர்த்தகநாம வலிமையைப் பொறுத்தவரை, வங்கி 100க்கு 87 என்ற வர்த்தகநாம வலிமைச் சுட்டெண் (BSI) புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், மீண்டுமொருமுறை Brand Finance இனால் கௌரவமிக்க AAA தரப்படுத்தல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகநாமப் பெறுமதி மற்றும் வலிமை ஆகிய இரண்டிலும் வங்கி தனது நிலையைத் தக்கவைத்துள்ளமை, அதன் வர்த்தகநாமச் செயற்பாடுகளின் சீரான தன்மை மற்றும் மீளெழுச்சித் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2026 தரவரிசையில் வங்கியின் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க அவர்கள் குறிப்பிடுகையில்:
கௌரவமிக்க AAA தரப்படுத்தலுடன் வர்த்தகநாம வலிமையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளமையும், வர்த்தகநாமப் பெறுமதியில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சியும் கொமர்ஷல் வங்கியின் வலிமை, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையின் தெளிவான பிரதிபலிப்பாகும். இந்தத் தரவரிசையானது எமது பங்குதாரர்கள் வங்கி மீது வைத்துள்ள நீடித்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், வர்த்தகநாமக் கட்டமைப்பு நோக்கிய எமது நீண்டகால அணுகுமுறையின் வினைத்திறனை வெளிப்படுத்துகின்றது எனத் தெரிவித்தார்.
கொமர்ஷல் வங்கியின் வர்த்தகநாம வலிமையானது மூலோபாய சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களுக்கு அப்பால், இலங்கைச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கட்டியெழுப்பப்பட்ட வலுவான மற்றும் நீடித்த உறவுகளிலிருந்து அதன் அடிப்படைப் பெறுமதியைப் பெறுகின்றது. உயர்மட்ட பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முதல் அனைத்து மக்கள் வரை இந்த நம்பிக்கையானது வங்கியின் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரிகள், நாடளாவிய ரீதியிலான கிளைக் குழுக்கள் மற்றும் விவசாய மற்றும் நுண்நிதிப் பிரிவு (AMFU) ஊழியர்களால் கள ரீதியாகத் தொடர்ச்சியாக வளர்க்கப்படுகின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.























