Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

    Mobitel Inner 1278

    நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.


    அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார்கள். மணமுடிந்த பிறகும் செம பிஸியாக நடித்துவரும் நயன், ஹிந்தியில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க, அவர் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின.


    கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு, சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.


    அதனையடுத்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள். அதிலும் சர்ச்சைகள் கிளம்பி பிறகு அடங்கியது. தொடர்ந்து, திருமணம் முடிந்த பிறகு சில நடிகைகள் நடிப்பிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.


    ஆனால் நயனோ இப்போதும் பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் டாக்சிக், ஹாய் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்தன. அடுத்தடுத்து இரு படங்கள் தோற்றதால் அவரது மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் காணவே செய்திருக்கிறது.


    தமிழில் அவர் இப்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சுந்தர்.சி அந்தப் படத்தை இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்தார். நயன் நடித்திருந்தார்.


    படம் மெகா ஹிட்டானது. எனவே இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான டீசரில் இருந்த கிராஃபிக்ஸ் தரம் அந்த எண்ணத்தையும் கொஞ்சம் அசைத்து பார்த்தது. தமிழ் போன்றே ஹிந்தியிலும் படங்கள் கமிட்டாகவிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் நயன் நடித்த முதல் படமான ஜவான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.


    அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அங்கே அடுத்தடுத்து வாய்ப்புகள் வர கதவுகளை திறந்திருக்கின்றன. அந்தவகையில் வாரிசு இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் கூடிய சீக்கிரம் நடக்கவிருக்கிறது.


    இப்படி நயனின் கரியர் படு பிஸியாக இருக்கும் சூழலில், 2031 ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல் வட்டமடித்தன. அரசியலுக்கு வந்த விஜய்யின் வெற்றி, மற்ற சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது.


    எனவே இதுவும் சாத்தியாமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால், விக்னேஷ் சிவனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நயன்தாரா இப்போது தாயாகியிருக்கிறார். குழந்தையையும், குடும்பத்தையும் கவனிப்பதிலும், வீட்டை பார்த்து கொள்வதிலுமே தனது முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், நிறைவுமே எங்களுக்கு இப்போது போதுமானதாக இருக்கிறது" என சொல்லி, தன் மனைவியின் அரசியல் என்ட்ரி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.