Oct 12, 2026 - 10:15 AM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை, வேறு இடத்திற்கு மாற்றி நிறுத்துவதற்கு முற்பட்டவேளை, சாரதியின் கவனக்குறைவால் அது விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியை இயக்கியபோது, பிரேக்கிற்குப் (Braking system) பதிலாகச் சாரதி தவறுதலாக எக்ஸிலரேட்டரை (Accelerator) மிதித்துள்ளார். இதனால், லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிச் சென்று மின் கம்பத்துடன் மோதி நின்றது.
இச்சம்பவம் நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வேறு எவருக்கும் காயங்கள் ஏதுமின்றிப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


































