Aug 24, 2026 - 12:43 PM





இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா, இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு நிதின் அடிக்கடி வந்து சென்றார்.
இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அவர் கண்டித்தார். ஆனால் அஞ்சு கள்ளக்காதலை கைவிடவில்லை. கணவர் எதிர்ப்பை மீறி தனது வீட்டிற்கு கள்ளக்காதலன் நிதினை அழைத்து வந்தார்.
இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தெரிந்த உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுபம் அங்குள்ள பொலிஸில் புகார் அளித்தார்.
பொலிஸார் கணவன் - மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை பொலிஸ் நிலையம் வரவழைத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சுபம் தனது மனைவி என்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும்.
இருவருடன் சேர்ந்து இருக்க முடியாது. வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என கூறினார். ஆனால் அஞ்சு தனது கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும். இருவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார். இதனை கேட்டதும் பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பொலிஸார் 3 பேரிடமும் தனித்தனியாக பேசினர். இந்த விவகாரத்தில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வர முயன்றனர். ஆனால் நீண்ட விவாதத்திற்குப் பிறகும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அஞ்சு தன் கணவர் சுபம் மற்றும் காதலன் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து அஞ்சு இருவரும் வேண்டும் என அடம் பிடித்ததால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.























