Header Logo
SLIC
வணிகம்
Prime Residencies, கம்பஹாவில் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குடியிருப்பு சமூகமான (Gated community) ‘The Palace Gampaha’ வை உரிமையாளர்களிடம் கைய

Aug 25, 2026 - 04:18 PM

Prime Residencies, கம்பஹாவில் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குடியிருப்பு சமூகமான (Gated community) ‘The Palace Gampaha’ வை உரிமையாளர்களிடம் கைய
Mobitel Inner 1278
EDEX Inner

நவீன ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Prime Group இன் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பிரிவான Prime Lands Residencies PLC, கம்பஹாவில் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குடியிருப்பு சமூகமான ‘The Palace Gampaha’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, அதன் குடியிருப்புகளை உத்தியோகபூர்வமாக வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்ததன் மூலம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் குடியிருப்பு திட்டத்தின் உத்தியோகபூர்வ கையளிப்பு விழா, வீட்டு உரிமையாளர்களிடம் குடியிருப்புகளை கையளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இன்று, The Palace Gampaha, கம்பஹா பகுதியில் குறிப்பிடத்தக்கதும் சிறப்புமிக்கதுமான குடியிருப்பு அடையாளமாகத் திகழ்கிறது. 

கம்பஹா நகரிலிருந்து வெறும் 2 கிலோமீற்றர் தொலைவிலும், கொழும்பு – கண்டி பிரதான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவிலும் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள The Palace Gampaha, சிறந்த போக்குவரத்து இணைப்பு, பாதுகாப்பு மற்றும் நவீன வாழ்க்கைமுறைக்குத் தேவையான வசதிகளை ஒருங்கிணைத்த, முறையாகத் திட்டமிடப்பட்ட குடியிருப்பு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் புறநகர் வாழ்க்கை முறைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. 

தரைத்தளம் உட்பட மூன்று மாடிகளைக் கொண்ட The Palace Gampaha, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட 480 அடுக்குமாடிக் குடியிருப்புகளை கொண்டுள்ளது. இக்குடியிருப்புகளின் விலை ரூ.27.5 மில்லியனிலிருந்து ஆரம்பிக்கின்றன. தரத்தில், வசதியில் அல்லது வாழ்க்கைமுறையில் எவ்வித சமரசமும் இன்றி, உயர்தரமான, முறையாகத் திட்டமிடப்பட்ட சமூகக் குடியிருப்பு வாழ்க்கையை இலங்கை குடும்பங்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதே Prime Residencies நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். The Palace Gampaha, இந்தத் தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்தும் மற்றுமொரு சிறப்புமிக்க திட்டமாகத் திகழ்கிறது. 

The Palace Gampaha, வெறுமனே ஒரு குடியிருப்பு வளாகமாக அல்லாமல், முழுமையான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த வாழ்விடமாக வடிவமைக்கப்பட்டுள்ள The Palace Gampaha, இப்பகுதியில் காணப்படும் மிக விரிவான வசதிகளின் தொகுப்புகளில் ஒன்றை வழங்குகிறது. 13½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்திட்டத்தில், மொத்த நிலப்பரப்பில் 20% மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 80% நிலப்பரப்பு. அழகிய நிலத்தோற்றப் பகுதிகள் மற்றும் பொதுவான வசதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களுக்காக முழுமையாக வேலியிடப்பட்டு, பாதுகாப்புடன் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அழகிய நிலத்தோற்றத் தோட்டங்கள், நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், கிளப் ஹவுஸ், நூலகம், சமூக சமையலறை, அழகு நிலையம், சலவை வசதி, மினி மார்ட் மற்றும் Lyceum Group நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட விரிவான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ள, துடிப்பானதும் வசதியானதுமான ஒரு முழுமையான குடியிருப்பு சமூகத்தை The Palace Gampaha உருவாக்கியுள்ளது. 

சுற்றாடலுக்கு பொறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன் செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையில், நிலைபேறான உட்கட்டமைப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற பொறியியல் தீர்வுகளும் இக் கட்டுமானத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாட்டுப் பகுதிகளுக்கான சூரிய மின்சக்தி வசதி, நிலத்தடியில் அமைக்கப்பட்ட மின்சார கேபிள் வலையமைப்பு மற்றும் நீரை மறுசுழற்சி செய்யும் வசதியுடன் கூடிய நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இதில் அடங்குகின்றன. 

கம்பஹாவில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு சமூகமாக அமைந்துள்ள இத்திட்டம், சட்ட மற்றும் பொறியியல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க சாதனையை நிலைநாட்டியுள்ளது. குடியிருப்புகளை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்குத் தேவையான அனைத்து சட்டரீதியான அனுமதிகளையும் Prime Residencies வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இதில் காண்டோமினியம் முகாமைத்துவ அதிகாரசபை வழங்கிய சான்றிதழ்கள், காண்டோமினியம் திட்ட வரைபடம் மற்றும் உரிமைப் பிரகடனப் பத்திரம் ஆகியவையும் அடங்குகின்றன. இதன் மூலம், குடியிருப்பு உரிமையாளர்கள் முதல் நாளிலிருந்தே அனைத்து சட்டத் தேவைகளுக்கும் முழுமையாக இணங்கியதும் முறையான மற்றும் தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படுவதுமான குடியிருப்பு சமூகத்தில் வசிப்பதை Prime Residencies உறுதி செய்துள்ளது. 

இந்த முக்கிய மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த Prime Group இன் தலைவர் பிரேமலால் பிரஹ்மனகே: 

“The Palace Gampaha என்பது மற்றுமொரு குடியிருப்பு திட்டத்தை நிறைவு செய்ததைக் காட்டிலும் மேலானதாகும். இலங்கையர்களின் வாழ்க்கை முறையை மேலும் சிறப்பிக்கும் வகையிலான பெருமளவிலான ஒருங்கிணைந்த குடியிருப்பு சமூகங்களை உருவாக்கும் எமது தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது. 

கம்பஹாவில் திட்டமிடப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு குடியிருப்பு சமூகத்தை வழங்கியிருப்பது, எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், நாம் வழங்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதில் எமது குழுவினர் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். தலைமுறைகள் பல கடந்து பயனளிக்கும் வகையில் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்பு சமூகத்திற்கு 480 குடும்பங்களை வரவேற்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். 

The Palace Gampaha திட்டத்தின் வெற்றிகரமான நிறைவு மற்றும் உத்தியோகபூர்வக் கையளிப்பு, தொலைநோக்குப் பார்வை மற்றும் வடிவமைப்பு முதல் நிர்மாணம் மற்றும் இறுதிக் கையளிப்பு வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும், தான் வழங்கும் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் Prime Lands Residencies PLC நிறுவனத்தின் திறமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது. 30 ஆண்டுகால சிறப்பான அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட Prime Group, இதுவரை 70க்கும் மேற்பட்ட பாதுகாப்பான குடியிருப்பு சமூகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன், இலங்கை முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தற்போது ஐந்திற்கும் மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்பு திட்டங்கள் நிர்மாணப் பணிகளில் உள்ளன. 

தொடர்ச்சியான ஆண்டுகளில் Real Estate Asia Awards விருது விழாவில் ‘Developer of the Year – Sri Lanka’ என்ற கௌரவத்தை Prime Group பெற்றுள்ளது. மேலும், இலங்கையின் முன்னணி நிறுவன அறிக்கையிடல் விருதுகளான TAGS Awards இல், வணிகத் துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் Land and Property Sector பிரிவில் Gold Award விருதையும் வென்றுள்ளது. இந்தப் பாராட்டுகளுடன், நம்பகமான முறையில் திட்டங்களை நிறைவு செய்து கையளித்தல், தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் உயர்தரமான கட்டுமானத் திறன் ஆகியவற்றில் Prime Group கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவும் இணைந்து, தரமான வீடுகளைத் தெரிவு செய்யும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள நிறுவனத்தின் திறனைப் பிரதிபலிக்கின்றன. இதன் மூலம், இலங்கையின் குடியிருப்பு அபிவிருத்தித் துறையில் புதிய தரநிலைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் நிறுவனமாக Prime Group திகழ்கிறது. 

The Palace Gampaha திட்டத்தின் வெற்றிகரமான நிறைவு மற்றும் உத்தியோகபூர்வக் கையளிப்பு, தாம் வழங்கும் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதில் Prime Lands Residencies PLC கொண்டுள்ள திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது. ஒப்பில்லாத நிபுணத்துவம். நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்.


MOST READ

காணொளி
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

Mobitel 1278