Header Logo
SLIC
வணிகம்
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

Aug 28, 2026 - 10:52 AM

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்
Mobitel Inner 1278
EDEX Inner

* 2026 ஆகஸ்ட் 21 முதல், கொரிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள எமது விசா விண்ணப்ப நிலையத்திற்கு வருகை தந்து, தங்களது விண்ணப்பங்களை மிகவும் இலகுவாக எவ்வித சிரமமுமின்றி சமர்ப்பிக்க முடியும். 

* விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக எமது நிலையத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், முன்கூட்டியே அனுமதியை (Prior appointment) பெறுவது கட்டாயமானதாகும். 

அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பான பயணச் சேவைகளை வலுப்படுத்தும் சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய முன்னணித் தொழில்நுட்ப சேவை நிறுவனமான VFS Global, கொழும்பில் அமைத்துள்ள அதிநவீன கொரிய விசா விண்ணப்ப நிலையத்தின் ஊடாக இலங்கையில் தென்கொரிய விசா சேவைகளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள கொரிய விசா விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மேம்பட்ட மற்றும் சௌகரியமான விசா விண்ணப்ப அனுபவத்தை அளிக்கும். 

2026 ஆகஸ்ட் 21 முதல், இலங்கை முழுவதும் உள்ள கொரிய விசா விண்ணப்பதாரர்கள் இணையவழி (Online) மூலமாக முன்கூட்டிய அனுமதிக்காகப் (Prior Appointment) பதிவு செய்து, கொழும்பிலுள்ள புதிய கொரியா விசா விண்ணப்ப நிலையத்தில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். 

இலங்கைக்கான தென்கொரியத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திருமதி. இயுஞ்சி காங் கருத்து தெரிவிக்கையில், VFS Global விசா விண்ணப்ப நிலையத்துடனான எங்களது கூட்டுப்பணி, விசா விண்ணப்பதாரர்களுக்கு அதிக சௌகரியத்தையும் மேம்பட்ட சேவைகளையும் வழங்குவதற்குப் பங்களிக்கும் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார். 

VFS Global தெற்காசியாவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திருமதி. யுமி தல்வார் கருத்து தெரிவிக்கையில் எமது கொரிய விசா விண்ணப்ப நிலையத்தின் தொடக்கமானது, இலங்கை முழுவதும் உள்ள பயணிகளுக்கான விசா விண்ணப்பச் சமர்ப்பிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். பரந்த இடவசதியுடன், நவீனமயமாக கொழும்பின் நிலையப்பகுதியில் அமைந்துள்ள இந்நிலையம், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டக்கூடிய நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் சேவையுடன், வசதியான மற்றும் சௌகரியமான சூழலை அளிக்கிறது.” என்றார். 

VFS Global நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் கொரியக் குடியரசின் அரசாங்கத்திற்கு விசா செயலாக்கச் சேவைகளை வழங்கும் நம்பிக்கைக்குரிய பங்காளராக விளங்கி வருகின்றது. நிறுவனம் உலகளவில் 5 நாடுகளில் உள்ள 7 அர்ப்பணிக்கப்பட்ட விசா விண்ணப்ப நிலையங்களின் வலையமைப்பின் ஊடாக கொரியக் குடியரசு சார்பாக விசா சேவைகளை வழங்கி வருகின்றது. 

விசா விண்ணப்பச் செயற்பாட்டில் VFS Global நிறுவனத்தின் பங்களிப்பானது ஆரம்பக்கட்ட நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே உட்பட்டதாகும். இதில் விசா விண்ணப்பப் படிவங்களைச் சேகரித்தல், சரிபார்ப்புப் பட்டியலுக்கு அமைவான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் கைவிரலடையாளங்களைப் பதிவுசெய்தல் (Biometrics) என்பன அடங்குகின்றன. விசா வழங்குதல் அல்லது நிராகரித்தல் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் VFS Global நிறுவனத்திற்கு எவ்விதப் பங்குமில்லை. விசா வழங்குவது அல்லது நிராகரிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் முழுமையான அதிகாரமும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு மட்டுமே உரித்தானதாகும். 

கொழும்பிலுள்ள கொரியா விசா விண்ணப்ப நிலையம்: 

* முகவரி: 2 ஆம் மாடி, இலக்கம் 657, கலாநிதி டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 00900, மேல் மாகாணம்.

* சேவை நேரங்கள்: மு. ப. 8.00 மணி முதல் பி. ப. 4.00 மணி வரை

* விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நேரம்: மு. ப. 8.00 மணி முதல் பி. ப. 3.00 மணி வரை

* கடவுச்சீட்டுகளைப் (Passport) பெற்றுக்கொள்ளும் நேரம்: மு. ப. 10.00 மணி முதல் பி. ப. 4.00 மணி வரை 

விசாத் தேவைகள், கட்டணங்கள், முன்அனுமதிப் பதிவு மற்றும் கிடைக்கப்பெறும் சேவைகள் தொடர்பான சமீபத்தியத் தகவல்களைக் கொரியக் குடியரசின் தூதரக உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் VFS Global உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலதிக தகவல்களுக்கு அல்லது முன்அனுமதியைப் (Appointment) பதிவு செய்ய, https://visaforkorea-sl.com ஐப் பார்வையிடவும். 

VFS Global பற்றி 

அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகளுக்கான பாதுகாப்பான பயணச் சேவைகளை வலுப்படுத்தும் சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய முன்னணித் தொழில்நுட்ப சேவை நிறுவனமான VFS Global, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் இராஜதந்திர தூதரகங்களுக்கு உதவும் பொருட்டு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட தொழில்நுட்பப் புதுமைகளை வரவேற்று ஏற்றுக்கொள்கிறது. இந்நிறுவனம், தனது பங்காளிகளான அரசாங்கங்களுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரகச் சேவைகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமற்ற நிர்வாகப் பணிகளை முன்னெடுத்து, அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் மிக முக்கிய பணியில் முழுமையாகக் கவனஞ்செலுத்தவும் வழிவகுக்கிறது. 

தொழில்நுட்ப அபிவிருத்தி, தகவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஒரு பொறுப்புமிக்க அணுகுமுறையுடன், இந்நிறுவனம் 71 அரசாங்கங்களின் நம்பிக்கைக்குரிய பங்காளராகச் செயற்படும் அதேவேளை, நெறிமுறை சார்ந்த நடைமுறைகளுக்கும் நிலைபேறாண்மைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. 169 நாடுகளில் 4,200க்கும் மேற்பட்ட விண்ணப்ப நிலையங்களை இயக்கி வரும் VFS Global, 2001 ஆம் ஆண்டு முதல் 557 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை வினைத்திறனுடன் செயலாக்கியுள்ளது.* 

ஸூரிச் மற்றும் டுபாய் ஆகிய தளங்களை தலைமையகமாகக் கொண்டுள்ள VFS குளோபல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை உலகின் மிகப்பெரிய மாற்றுச் சொத்து முகாமைத்துவ நிறுவனமான பிளாக்ஸ்டோன் (Blackstone) வைத்துள்ளதுடன், சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட குவோனி அண்ட் ஹுகென்டோப்ளர் அறக்கட்டளை (Kuoni and Hugentobler Foundation), சிங்கப்பூரை தளமாகக் கொண்ட டெமாசெக் (Temasek) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட டுபாய் ஹோல்டிங்ஸ் (Dubai Holdings) ஆகிய சிறுபான்மை பங்குதாரர்களையும் கொண்டுள்ளது. 

* VFS Global நிறுவனத்தின் 344.15 மில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் CiX Citizen Experience நிறுவனத்தின் 212.94 மில்லியன் பரிவர்த்தனைகள் இதில் அடங்குகின்றன.


MOST READ
07
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

Aug 28, 2026 - 10:52 AM


காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278