Header Logo
SLIC
செய்திகள்
மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை

Aug 29, 2026 - 10:53 AM

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை
Mobitel Inner 1278
EDEX Inner

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த விசேட கலந்துரையாடல், நேற்று (28) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கடந்த காலங்களில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும் எனப் புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மாற்றங்கள் அடங்கிய 26/1298/110/046 இலக்கமுடைய புதிய சுற்றுநிருபம், 2026 ஜூலை 6 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு மற்றும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்குக் கனிம வளங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இருப்பினும், அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனைக் கருத்தில் கொண்டு, அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமான கனிம வள அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிருபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான கனிம வளங்களை உரிய அனுமதிகளுடன், கட்டுப்பாட்டு விலைகளில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். 

மேலும், கனிம வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்தவும், சட்டவிரோத அகழ்வுகளைத் தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தப் புதிய நடைமுறையானது வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278