Sep 3, 2026 - 02:56 PM

காய்ச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் மமிதா பைஜுவால் பங்கேற்க முடியவில்லை.
நடிகை மமிதா பைஜு அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஓணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் மமிதா பைஜுவால் பங்கேற்க முடியவில்லை.
இது குறித்து விழா குழுவினருக்கு அவர் அனுப்பி உள்ள பதிவில், நான் வைத்தியசாலையில் இருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக என்னால் அங்கு வரமுடியவில்லை. உடல்வலி மற்றும் உடல்நலக்குறைவால் பயணம் செய்ய வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சூழ்நிலை காரணமாக என்னால் அவுஸ்திரேலியாவுக்கு வர முடியவில்லை. அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



























