Sep 3, 2026 - 05:57 PM

ஜெயம் ரவி என பரவலாக அறியப்பட்ட ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தொடர்ந்து ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் நெருக்கத்தில் இருந்தார். மனைவியை பிரிந்த பின்னர் கெனிஷாவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரவி மோகன் கலந்து கொண்டார்.
இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மே மாதம் ரவி மோகனை பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இந்த பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில் படங்களில் நடிப்பதில் பிஸியானார் ரவி மோகன். அவரது நடிப்பில் அடுத்ததாக 'கராத்தே பாபு' திரைப்படம் வெளியாகவுள்ளது.
தொடர்ந்து 'ப்ரோ கோட்', 'பென்ஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் ரவி மோகன் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' (An ordinary man) என்கிற படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார்.
ரவி மோகனே தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல். அதற்கான பணிகளை கெனிஷா தொடங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரவி மோகனை பிரிந்து சென்றுவிட்டதாக கெனிஷா கூறியிருந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றுவது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.



























