Header Logo
SLIC
இந்தியா
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!

Sep 4, 2026 - 03:19 PM

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!
Mobitel Inner 1278
EDEX Inner

சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்கள். 

சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களை போன்று பகலில் வெயில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் மழை காலம் போன்று காணப்படுகிறது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவுக்கு பகலில் வெயில் வாட்டுகிறது. 

இப்படி கால நிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது. 

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். 

இந்த காய்ச்சல் 5 நாட்கள் வரை நீடிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மனநல, சுகாதார இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான வைத்தியர் எஸ்.எம். பதூர் மொய்தீன் தெரிவிக்கும் போது, காய்ச்சல் பாதிப்பை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. 

எச்1என்1 என்ற வைரஸ் பாதிப்பால் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ அதன்மூலம் மற்றவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. 

எனவே காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

முக கவசங்களையும் அணிந்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த காய்ச்சல் எளிதில் தொற்றி கொள்கிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் மற்றவர்கள் தற்காப்புக்காக வைத்தியர்களின் அறிவுரையுடன் காய்ச்சல் மாத்திரைகளை உட்கொள்ளலாம் என தெரிவித்தார். 

இந்த காய்ச்சல் காரணமாக பாடசாலை, கல்லூரி மாணவ - மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலை நேரங்களில் வைத்தியசாலைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. 

நோயாளிகளை பரிசோதிக்கும் வைத்தியர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278