Sep 7, 2026 - 05:47 PM

இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்து தென்னிந்தியா பக்கம் வந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவில் அண்மையில் எல்லா மொழிகளிலும் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கப்பட்டுள்ளது.
தமிழில் விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 10 ஆவது சீசன் நேற்று (06) பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று நிகழ்ச்சி துவங்கப்பட இதற்கு முன் சமூக வலைதளங்களில் போட்டியாளர்கள் விவரங்களில் சிலரும், நாம் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சி துவங்கிவிட்டது இனி 100 நாட்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் தான் என எல்லோரும் நிகழ்ச்சியை ஆவலாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். 8 ஆவது சீசன் முதல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த 10 ஆவது சீசனிற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்று ஒரு விவரம் வலம் வருகிறது. விஜய் சேதுபதிக்கு 10 ஆவது சீசன் தொகுத்து வழங்க 75 கோடி ரூபா முதல் 80 கோடி ரூபா வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

























