Header Logo
Vallibel FD
Selan Bank
மலையகம்
சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

Sep 10, 2026 - 10:29 AM

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!
Mobitel Inner 1278

பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டப் பகுதியில், பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் நேற்று (09) காலை பாரிய சிறுத்தைப் புலி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதன் காரணமாக, குறித்த பகுதியில் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 07 ஆம் திகதி காலை வேளையில், குறித்த சிறுத்தைப் புலி தேயிலை மலையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்ததை பொதுமக்கள் இனம் கண்டு, தமது கையடக்கத் தொலைபேசியில் அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக நல்லதண்ணீர் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டப் பகுதியில் கடந்த வாரம் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி, டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், இந்தப் பகுதியில் சிறுத்தைப் புலியின் நடமாற்றம் காரணமாகப் பல வளர்ப்பு நாய்களும் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, இந்த விடயம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிங்காரவத்தை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
தீர்த்த திருவிழா!

தீர்த்த திருவிழா!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

Mobitel 1278