Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
குடியரசுத் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் $5,000

Sep 10, 2026 - 02:19 PM

குடியரசுத் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் $5,000
Mobitel Inner 1278

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுத் கட்சி (Republicans) காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டால், ஒவ்வொரு அமெரிக்க பெரியோருக்கும் 5,000 அமெரிக்க டொலர் "டிரம்ப் டிவிடெண்ட்" (Trump dividend) வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தெரிவித்துள்ளார். 

வாக்காளர்களைத் தம் கட்சிக்கு ஆதரவாக ஈர்க்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 

குடியரசுத் கட்சியின் முதலாவது இடைத்தேர்தல் மாநாட்டில் டிரம்ப் இந்த முன்மொழிவைச் செய்தார். ஆனால் இந்தத் தொகையை எவ்வாறு வழங்குவது அல்லது இது சட்டப்பூர்வமாக சாத்தியமா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. 

சுமார் 270 மில்லியன் அமெரிக்க பெரியோர் உள்ள நிலையில், இந்தத் திட்டத்தை அமுல்படுத்த சுமார் 1.35 டிரில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும். 

தனது முதன்மை நேர உரையின் போது (primetime address), "ஜனாதிபதி பதவியின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த இரண்டு ஆண்டுகளை" நிறைவு செய்துள்ளதாக டிரம்ப் பெருமிதம் கொண்டார். தனது மக்கள் செல்வாக்கு சரிந்து வரும் நிலையிலும், இத்தேர்தலின் மையப்புள்ளியாகத் தம்மையே அவர் நிறுத்திக் கொண்டுள்ளார். 

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் ஈரான் மீதான போர் காரணமாக மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த பிரச்சாரப் பேச்சு தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய வாக்காளர்களைக் கவருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

"அமெரிக்காவின் எதிர்காலத்தை தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரிடம் ஒப்படைத்தால், நமது நாடு மீண்டும் தன் கால்களில் எழுந்து நிற்கவே அடுத்த ஒரு தசாப்த காலம் செலவிட வேண்டி வரும்" என்று அவர் கூறினார். 

மேலும், "குடியரசுத் கட்சிக்கு வாக்களியுங்கள், நாம் பல தலைமுறைகளுக்கு உலகையே நமக்கு பின்னால் விட்டுவிட்டு முன்னேறிச் செல்வோம்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

தீர்த்த திருவிழா!

தீர்த்த திருவிழா!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

Mobitel 1278