Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
மருதங்கேணி பாலத்தடியில் மீன்கள் கொத்து கொத்தாக இறப்பு!

Sep 15, 2026 - 09:55 AM

மருதங்கேணி பாலத்தடியில் மீன்கள் கொத்து கொத்தாக இறப்பு!
Mobitel Inner 1278

வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே இவ்வாறு மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. இதனால் குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வடமராட்சி கிழக்கு பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

மீன்கள் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வை மேற்கொண்டு, நீரின் தரம் மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட காரணிகளை பரிசோதிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

Mobitel 1278