Sep 18, 2026 - 11:21 PM

சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ரஜமஹா விகாரையின் பினர மகா பெரஹரா நாளை (19) ஆம் திகதி இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பெரஹரா சிலாபம் - குருநாகல் வீதியில் பயணிக்கவுள்ளதால், அக்காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





























