Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி!

Sep 19, 2026 - 09:41 AM

 அனோஜனுக்கான  மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி!
Mobitel Inner 1278

சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி, குறித்த சம்பவம் தொடர்பாக அனோஜன் சிவராசா என்ற இளைஞருக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தான் வருத்தமும் கவலையும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

"சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா என்ற இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளையில், இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது என்ற கருத்துச் சமுதாயத்தில் உருவாகியுள்ளது. 

சமூக வலைத்தளங்கள் வாயிலாக மனதை புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே கடுமையான தீர்மானமாக உள்ள பின்னணியில், அந்தச் செயலுக்காக ஒரு மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்திற்கு எதிரானதுடன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். 

குறித்த கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதை அகற்றுவதற்கும், அது தொடர்பாக பகிரங்க வீடியோ மூலம் மன்னிப்பு கோருவதற்கும் அனோஜன் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. 

மனவேதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றத்தின் காரணமாக, ஒரு நபர் மனந்திரும்புவதற்கும், தனது தவறைச் சரிசெய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள வாய்ப்பை முற்றாக இல்லாதொழிக்கக் கூடாது. 

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த இளைஞருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சவுதி அதிகாரிகளிடம் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

அத்துடன் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அனுஜனுக்காக முறையான சட்ட உதவியை வழங்குவதற்கும், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நீதியையும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது கருணைக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்பதுடன், மீண்டும் தனது குடும்பத்தினரிடம் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனுஜனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அந்த 'X' பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா என்ற இந்த இளைஞர், மதத் தலைவரொருவரை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த இளைஞரை விடுவிப்பதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சிறப்புத் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார். 

இதனிடையே, குறித்த இளைஞருக்கு ஆரம்பத்தில் சிறைத்தண்டனையும் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிவிவகார அமைச்சின் தலையீட்டினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் காரணமாகவே இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்துகின்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278