Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு

Sep 20, 2026 - 06:53 AM

மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு
Mobitel Inner 1278

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

 

இதன் காரணமாக, இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

 

மேலும், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278