Sep 20, 2026 - 08:32 AM

மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.





























