Sep 20, 2026 - 07:31 PM

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





























