Sep 27, 2026 - 06:53 PM

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிவாரணத் தொகுதிக்காக 4,100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்கமைய, ஓக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்காக இந்த எரிபொருள் மானியம் கிடைக்கப்பெறும்.































