Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பத்தேகம துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் யார்? வௌியான தகவல்

Sep 28, 2026 - 08:28 AM

பத்தேகம துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் யார்? வௌியான தகவல்
Mobitel Inner 1278

காலி பத்தேகமவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ஒழங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த லொகு பெட்டியின் முக்கிய போட்டியாளரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவருமான 'கரந்தெனிய சுத்தாவினுடைய' தரப்பினால் நடத்தப்பட்டிருக்காம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

பத்தேகம, ஹல்பாதொட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டிய இலக்கு வைத்து நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். 

இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எவ்வித பயமும் சந்தேகமுமின்றி நபர் ஒருவரை இலக்கு வைத்துத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சி சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியிருந்தது. 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முச்சக்கரவண்டியை நோக்கிச் சுட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்த பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளதுடன், மற்றொரு பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். 

அங்கு கீழே விழுந்த பெண்ணைச் சுட்ட துப்பாக்கிதாரி, அதன் பின்னர் தப்பிச் சென்ற பெண்ணை நோக்கியும் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

பின்னர் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இரு பெண்கள் பத்தேகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடமிருந்து தப்பிக்க ஓடிய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர் அம்பலாங்கொட செஞ்சிலுவை வீடமைப்புத் திட்ட, கொடஹேன பகுதியைச் சேர்ந்த சுசிதா இரோஷனி என்ற 47 வயதுடைய பெண் ஆவார். 

'களு நோனா' என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட இவர், தற்போது சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'லொகு பெட்டியின் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பின் முக்கிய பெண்ணாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

21 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளதுடன், அது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பத்தேகம மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதற்கமைய, நேற்றைய தினமும் வாடகை முச்சக்கரவண்டியில் சென்று பொலிஸில் முன்னிலையாகிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்தவர் அவரது தாய் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன்படி, லொகு பெட்டியின் முக்கிய போட்டியாளரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவருமான 'கரந்தெனிய சுத்தாவினுடைய' தரப்பினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

உயிரிழந்த ஆண், மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த லலித் பிரசன்ன டி சில்வா என்ற 40 வயதுடைய வாடகை முச்சக்கரவண்டிச் சாரதியாவார். 

இச்சம்பவம் தொடர்பாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிறிவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், எல்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் வழிகாட்டலில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 39 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278