Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
அரசு சூரிய சக்தியை இல்லாது ஒழிக்க திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது?

Sep 28, 2026 - 10:53 AM

அரசு சூரிய சக்தியை இல்லாது ஒழிக்க திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது?
Mobitel Inner 1278

நமது நாட்டின் வலுச்சக்தி கொள்கை தொடர்பில் பொதுவான ஒரு அங்கீகாரமாக, உச்சக்கட்டமாக ஆற்றல் உற்பத்தியானது புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியாக அமைந்து பாணப்பட வேண்டும் என்றபோதிலும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த வேளை வலுச்சக்தி பற்றிப் பேசுகையில் 100% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பற்றி குறிப்பிட்டது. ஆனால், ஆட்சியமைத்ததும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியைப் புறந்தள்ளிவிட்டு, எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் கமிஷன்களுக்கு அடிபணிந்து போயுள்ளது. இதனால் நிலையான ஆற்றல் மற்றும் சூரிய சக்தியை முற்றிலுமாகக் குழிதோண்டிப் புதைக்கும் கொள்கையை வகுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

அண்மையில், வலுச்சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடிவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், நெட்-மீட்டரிங் (Net Metering) மற்றும் நெட்-அக்கவுண்டிங் (Net Accounting) ஆகியவற்றை நீக்கிவிட்டு 'நெட்-ப்ளஸ்' (Net Plus) முறையைச் செயற்படுத்துமாறு சட்டவிரோதமானதொரு ஆலோசனையை வழங்கியுள்ளார். அவ்வாறான ஆலோசனையை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளருக்கு எத்தகைய அதிகாரமும் கிடையாது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்கள் மத்தியில் சென்று கருத்துக்களை கேட்டு மாத்திரமே இதனை மேற்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

சூரிய சக்தி துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இத்துறைசார் பங்குதாரர்களுடன் எதிர்க்கட்சித் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இன்று பல்வேறு காரணங்களை முன்வைத்து சூரிய சக்தியை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பகலில் மலிவான விலையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டு இரவில் அதிக விலைக்குக் கொள்வனவு செய்யும் முறைக்குள் போலியான தரவு மையவாத வாதமொன்றை முன்வைக்க முயல்கின்றனர். சூரிய சக்தி வல்லுநர்கள் இந்த வாதங்கள் பொய்யானவை என தர்க்கரீதியாக நிரூபித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

🟩 அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையினால் நாட்டுக்கு 25 பில்லியன் ரூபா நட்டம். 

சூரிய சக்தி விரிவுபடுத்தப்படுவதன் மூலம் அனுகூலங்களைப் பெறாத தொழில்முனைவோருக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும், தோராயமாக 2500 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் 25 பில்லியன் ரூபா பொருளாதாரத்தை உருவாக்கும் தொழில்துறையானது, நெட்-மீட்டரிங் மற்றும் நெட்-அக்கவுண்டிங் ஆகியவற்றை நீக்கிவிட்டு நெட்-ப்ளஸ் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தால் நாசப்படுத்தப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

🟩 சூரிய சக்தி தேசிய இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. 

அரசாங்கம் எரிபொருள் எரிசக்தி மாபியாவின் அடிமைகளாகச் செயற்பட்டுகொண்டு, சூரிய சக்திக்கான தேசிய இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதாகக் கூறினாலும், கூரைகளின் மீது பொருத்தப்பட வேண்டிய சூரிய சக்தியானது பத்து இலட்சம் கூரைகள் என்ற இலக்கை அடைய வேண்டியிருந்தும், இன்னும் 150,000 மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் 850,000 கூரைகள் எஞ்சியுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்த எரிசக்தி சந்தையில் ஆதிக்கச் சந்தையொன்றை உருவாக்குவதற்காக பல்வேறு சக்திவாய்ந்த தரப்பினருடன் இணைந்து செயற்படுவதால், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சூரிய சக்தி தொழில்முனைவோரை நடு வீதியில் கைவிட்டுள்ளனர். சூரிய சக்தியை அழிப்பதை விடுத்து, சூரிய சக்தியை மேம்படுத்தும் முறைமைகளை உரிய இடங்களில் ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

🟩 சூரிய சக்தியை மேம்படுத்தும் உபகரணங்களுக்கு வரிச் சலுகைகைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

ஒரு வீட்டின் கூரையின் மேல் பொருத்தப்படும் சூரிய சக்தியை திட்டத்தை மேம்படுத்துவதற்கு இந்த உபகரணங்களுக்கும் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று யார் என்ன கூறினாலும் சூரிய சக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் மாநாடுகளில் இந்த அரசாங்கம் பொய்களை பிரஸ்தாபித்து வருகின்றது. எரிபொருள் வலுச்சக்தி மாபியாவின் பிடியில் வீழ்ந்துள்ள அரசாங்கம், இனிமேலும் பொய்களைக் கூறாமல் சூரிய சக்தி திட்டங்களுக்கும், கூரைகளின் மீதான சூரிய சக்திக்கும் அனுமதியைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். 

🟩 அரசாங்கத்தின் இக்கொள்கையினால் மூளைசாளிகளின் வெளியேறல்களும் ஏற்படலாம். 

இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறை பற்றிப் பேசப்படும் வேளையில், சிறிய அளவிலான சோலார் வியாபாரங்களை மேற்கொள்பவர்கள் படித்த இளைஞர்களாக காணப்படுகின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்த இளைஞர்கள் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர். பெருமளவு முதலீட்டுடன் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் சீரழிந்துபோயுள்ளன. அரசாங்கத்தின் இந்த துர்ப்பாக்கியமான கொள்கை காரணமாக மூளைசாலிகளின் வெளியற்றம் பரவலாக மேலேழுந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

🟩 தற்போதைய அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையிலேயே பயணிக்கிறது. 

இந்தக் கொள்முதல் செயற்பாட்டை ஏகபோகமாக்காமல், தேசிய முறைமை செயற்பாட்டாளரைப் போலவே மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்திற்கும் கொள்முதல் செயற்பாட்டில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். முன்னாள் அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு 37 ரூபாவாக வழங்கியதைச் சட்டவிரோதமாக 27 ரூபாவாக மாற்றிய அதே பாதையைப் பின்பற்றி, தற்போதைய அரசாங்கம் அதனை 27 ரூபாவிலிருந்து 20 ரூபாவாகக் குறைத்துள்ளது. இந்த அரசாங்கம் சூரிய சக்தியை அழித்து இந்நாட்டில் 'சஹஸ்ததனவி' திட்டத்திற்கு ஆதரவளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.'யுகதனவி', 'சோபாதனவி' மற்றும் 'சஹஸ்ததனவி' என்பன வெறும் வெற்று வார்த்தைகளே தவிர, ஒரு எல்.என்.ஜி (LNG) யூனிட் கூட உற்பத்தி செய்யவில்லை. அரசாங்கம் டீசல் மின்சாரத்திற்கே ஆதரவளித்து வருகின்றது. டீசல் மின்சார மாபியாவிற்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். 

🟩 சூரிய சக்தியை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் கொள்கையினால் மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 

இன்றேனும் இப்பிரச்சினையில் தலையிட்டு, நாட்டின் சூரிய சக்திப் புரட்சியில் ஆயிரம் ஏக்கமுடன் இத்திட்டங்களில் இணைந்த தொழில்முனைவோரை அநாதரவாக்காமல், சூரிய சக்திக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும். இவர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அமைச்சன் செயலாளர் கூட சட்டவிரோதமான தீர்மானங்களை எடுத்துள்ளார். இந்த தேசத்துரோக வலுச்சக்தி மாபியாக்களை இல்லாதொழித்து, சூரிய சக்தியானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக அமைந்து காணப்பட வேண்டும். 100% இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். 

வலையொளி இணைப்பு- எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் கமிஷன்களுக்கு அடிபணிந்துள்ள தற்போதைய அரசாங்கம், சூரிய சக்தியை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

Mobitel 1278