Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!

Sep 30, 2026 - 05:18 PM

முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!
Mobitel Inner 1278

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கு (UNGA81) இணையாக, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான முக்கிய இருதரப்புச் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். 

அதன்படி, நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலை (Shisir Khanal) சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை அம்சங்களை முன்னெடுத்துச் செல்வது, நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மற்றும் பொதுவான காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடினார். 

மேலும், அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இலங்கையின் ஆதரவை அவர் வௌிப்படுத்தினார். 

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை (António Guterres) சந்தித்த அமைச்சர், இலங்கையின் பொருளாதார மீட்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். 

அத்துடன், வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நிதியியல் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

அதேநேரம், ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகளுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் (Jean-Pierre Lacroix) மற்றும் செயல்பாட்டு ஆதரவுக்கான உதவிப் பொதுச்செயலாளர் அதுல் கரே (Atul Khare) ஆகியோரையும் அமைச்சர் சந்தித்தார். 

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிப்படுத்திய அவர், தேசிய மனித உரிமைகள் பரிசீலனை பொறிமுறையின் (NHRSM) முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தினார். 

இதனிடையே. ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராஃபிசியை (Seyed Abbas Araghchi) சந்தித்த அமைச்சர், பிராந்திய பதற்ற தணிப்பு மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இலங்கையின் நிலப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார். 

அதேபோல், ஐக்கிய அரபு இராச்சிய பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானைச் (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) சந்தித்தபோது வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் அங்கு வாழும் இலங்கை சமூகத்தின் நலன்புரி சேவைகளை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278