Oct 2, 2026 - 02:20 PM

Sysco LABS தனது GLO (Guiding Leadership & Outreach) திட்டத்தின் இரண்டாம் கட்டப் பட்டமளிப்பு விழாவை அண்மையில் Courtyard by Marriott Colombo ஹோட்டலில் கோலாகலமாகக் கொண்டாடியது. இத்திட்டமானது, மனித வள நிபுணர்கள் சங்கம் (AHRP) மற்றும் குளோபல் லேர்னிங் லேப் (GLL) ஆகியவற்றுடன் இணைந்த பங்காண்மையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
GLO என்பது ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (UN SDGs) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தலைத்துவ மேம்பாட்டுத் திட்டமாகும். இது கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று, நடைமுறைச் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்களை ஈடுபடுத்துவதற்காக தலைத்துவ உருவாக்கம், தகவல் தொடர்பு, முறைமைச் சிந்தனை, குழுப்பணி மற்றும் நிலையான சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஒன்றிணைக்கின்றது. இக்கட்டத்தின் போது, மொரட்டுவை பல்கலைக்கழகம், SLIIT, IIT, கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பீடம் (UCSC), NSBM, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், APIIT, Digital Trust Alliance மற்றும் ECU உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 பல்கலைக்கழக மற்றும் தொழிற்துறை சார்ந்த குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பங்கேற்பாளர்கள், தீவிர தலைத்துவப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்ததுடன், உண்மையான சமூக சவால்களுக்குத் தீர்வு காணும் திட்டங்களையும் வடிவமைத்தனர்.
Sysco LABS இன் மக்கள் செயற்பாடுகள் சிரேஷ்ட பணிப்பாளரும், GLO செயற்திட்டத்தின் காப்பாளருமான ரெஹான் அந்தனிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “தலைத்துவக் கோட்பாடுகளைக் கற்றுக் கொண்டதோடு நின்றுவிடாமல், உண்மையான சமூகத் தேவைகளுக்குத் தீர்வு காணும் திட்டங்களாக இக்குழுவினர் அவற்றை மாற்றியமைத்துள்ளமை, GLO திட்டம் எதனைச் சாதனை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டதோ அதனைத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றது. இதுவே இலங்கையின் எதிர்காலத்திற்காக நாம் உருவாக்கி வரும் தலைவர்களின் உயர் ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்துகிறது.” என்றார்.
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நான்கு நிலையான சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், இப்பட்டமளிப்பு விழா இத்திட்டத்தின் நிறைவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. அவையாவன: NSBM பல்கலைக்கழகத்தின் AI அடிப்படையிலான ஸ்மார்ட் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி முறையான CarbonEye; எட்சிகுவன் பல்கலைக்கழகத்தின் (ECU) சார்பில் செவன மாற்றுத்திறனாளிகள் இல்லச் சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட எட்டு வார கால வாழ்க்கைத் திறன் திட்டமான Bright Path; கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் (UCSC) தொழிற்துறை சார்ந்த MLOps திறன் மேம்பாட்டு முயற்சியான ML Opsidian Genesis; மற்றும் டிஜிட்டல் டிரஸ்ட் அலையன்ஸ் அமைப்பினால் பாடசாலை மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டமான Safe Scroll என்பனவாகும். இத்திட்டங்கள் அனைத்தும் இணைந்து தரமான கல்வி, பாலின சமத்துவம், காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், பொறுப்பான நுகர்வு, தொழிற்துறை கண்டுபிடிப்புகள் மற்றும் நிலையான நகரங்கள் ஆகிய ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்குப் (SDGs) பங்களிப்பு செய்துள்ளன.
Sysco LABS பற்றி
Sysco LABS என்பது உலகின் மாபெரும் உணவுச் சேவைகள் வழங்கும் நிறுவனமான Sysco Corporation (NYSE: SYY) இன் புத்தாக்க பிரிவாகும். Fortune 500 நிறுவன தரப்படுத்தலில் 54 ஆம் இடத்தில் Sysco தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்களை உணவகங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் சர்வதேச ரீதியில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும்.
உணவு சேவைகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு அவசியமான சாதனங்கள் மற்றும் பொருட்களையும் கொண்டுள்ளது. 76000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு, உலகளாவிய ரீதியில் 340 க்கு அதிகமான ஸ்மார்ட் விநியோக பகுதிகளை இயக்குவதுடன், 14,000 IoT செயற்படுத்தப்பட்ட ட்ரக்களினூடாக சுமார் 730,000 வாடிக்கையாளர் பகுதிகளுக்கு சேவைகளும் வழங்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனம் 78 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விற்பனைகளை பதிவு செய்துள்ளது.
இலங்கை Sysco LABS, இனால் Sysco வின் முடிவு-முதல்-முடிவு செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படுகின்றன. Sysco LABS இன் enterprise தொழினுட்பம், முடிவு-முதல்-முடிவு உணவு சேவை தொழிற்துறையில் பிரசன்னமாகியிருப்பதுடன், உணவு தயாரிப்புகள், வர்த்தகநாமமிடல்கள், களஞ்சியப்படுத்தல்கள் மற்றும் களஞ்சியசாலை செயற்பாடுகள், ஓடர் வைப்புகள் மற்றும் விலையிடல்கள், உணவு விநியோகம் மற்றும் பொருட்களை விநியோகித்தல் போன்றவற்றை Sysco இன் சர்வதேச வலையமைப்பிலும், வாடிக்கையாளரின் உணவகத்தில் உணவருந்தும் அனுபவத்திலும் பிரசன்னமாகியுள்ளன.































