Oct 5, 2026 - 07:46 AM

பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 48 மணிநேர தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.































