Jun 13, 2026 - 09:29 AM -
0
மேஷம் : இன்று தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவர். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். மாணவர்கள் கவனச்சிதறல்களை குறைப்பது நல்லது. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம் : மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பிரிந்த காதலர்கள் ஒன்று சேருவர். தேவையற்ற செலவுகள் குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். மாணவர்கள் பகுதி நேர வேலைகளைப்பார்ப்பர். பெண்களுக்கு தங்களுக்கு பிடித்த துறையில் சேருவர். தடைகளெல்லாம் நீங்கும்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம் : புதிய முயற்சிகள் பலிக்கும். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். காதலர்கள் வெளியூருக்குச் செல்வர். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் கொள்வது நல்லது. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். சற்று சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். ஆனால், விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம் : ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். சுபச் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர். உங்களின் தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம் : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். உடல் நிலை மேம்படும். உற்சாகமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி : நட்பால் ஆதாயம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம் : இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம் : குடும்பத் தலைவிகள் தங்க ஆபரணங்களை வாங்கிவிடுவர். வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். கண் பிரச்சினை தோன்றும். ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிடித்தவர்களின் எதிரபாராத சந்திப்பு நிகழும். மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை.
சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். பெற்றோர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள். முகத் தோற்றம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு : வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமை பளிச்சிடும். தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. அவர்களால் ஆறுதலடைவீர்கள். ஆரோக்கியம் நன்கு இருக்கும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மகரம் : வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். பயணங்கள் நன்மையில் முடியும்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம் : பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்
மீனம் : குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

