Header Logo
Mogo Academy

செய்திகள்
உலகை உலுக்க வரும் 'கடுமையான எல்-நினோ' - அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!

Jun 11, 2026 - 11:10 PM -

0

உலகை உலுக்க வரும் 'கடுமையான எல்-நினோ' - அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!
Mobitel inner

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான 'எல்-நினோ' (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) அறிவித்துள்ளது. இது எல்-நினோ நிலையாகக் கருதுவதற்குத் தேவையான வரம்பைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இம்முறை எல்-நினோ நிலை மிகவும் வலுவடைந்து, "கடுமையான எல்-நினோ" நிலையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இது வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான எல்-நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 

மனித செயல்பாடுகளால் பல தசாப்தங்களாக ஏற்பட்டு வரும் புவி வெப்பமயமாதலுடன் இந்த நிலையும் இணைவதால், வரும் ஓராண்டு காலம் (பெரும்பாலும் 2027 ஆம் ஆண்டு) வரலாற்றில் அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக மாறக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

மேலும், இந்த நிலைமை காரணமாக உலகம் முழுவதும் காலநிலை வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் மோசமான சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பூமத்திய ரேகை பசிபிக் பிராந்தியத்திற்கு மேலேயுள்ள காற்று வடிவங்களிலும் தற்போது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாக NOAA அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. கடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலமும் எதிர்வினையாற்றி வருவதற்கான தெளிவான அறிகுறி இதுவெனக் கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக, வரும் மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான காலநிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara