Oct 10, 2026 - 01:09 PM

மாத்தளை, கம்முல்ல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இன்று (10) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் யடவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யடவத்தை பொலிஸாரால் இதுவரை 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


































