Oct 12, 2026 - 08:23 AM

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் எதிர்வரும் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாத நிலையில், படக்குழுவினர் கலந்துகொண்ட சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்திடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அப்போது ரஜினிகாந்திடம், “நீங்கள் எப்போதும் தன்னடக்கத்துடன், பணிவாக இருக்க என்ன காரணம்? அது வேண்டுமென்று செய்கிறீர்களா..? அல்லது உங்களுக்குள்ளே இயல்பாகவே இருக்கிறதா?” என்று நெல்சன் நேருக்கு நேர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், அதைவிட அதிகமாக நான் நடத்துனர் வேலையை நேசித்தேன்.
பேருந்தில் 5 ஆண்டுகள் நடத்துநராக நான் இருந்த நாட்களை இன்றும் மிஸ் செய்கிறேன். அதனால், என் மனதில் நான் கன்டெக்டர் என்ற விஷயம் ஆழமாக பதிந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு கன்டெக்டர் என்பதுதான் எப்போதும் நினைக்கத் தோன்றும். அதனால் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் என்பதை என்னுடன் பொருத்திப் பார்க்க முடிவதில்லை.
அதனால் அடிக்கடி பெங்களூரு சென்று விடுகிறேன். அந்த பேருந்தை பார்க்கும்போதும், காக்கி உடையை பார்க்கும்போதும் மனதுக்குள் ஒரு ஈர்ப்பு வரும். ஒரு பேருந்து நடத்துனர் உங்களைப் போன்ற பெரியவர்களுடன் தன்மையாகத்தானே நடந்து கொள்வார்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


































