Oct 12, 2026 - 06:31 AM

சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவரும் பௌத்த கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று (12) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு முன்பாக கடந்த 10 ஆம் திகதி இந்த நடைபயணம் ஆரம்பமானது முதல் நாளில் கடுகன்னாவயையும் இரண்டாவது நாளில் கேகாலையையும் அடைந்தது.
இந்த நடைபயணம் கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் கேகாலை நகரத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை, வரக்காபொல நகரைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


































