Oct 11, 2026 - 10:13 PM

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி இன்று (11) இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மாஸ் சதாகட் ஓட்டங்களைப் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 216 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 82 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


































